சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், வாங்கிய கடனை செலுத்தாததால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், ஜப்தி உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் "அன்னை இல்லம்" வீடு நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து, ராம்குமார் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.