சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

Prasanth Karthick

புதன், 5 பிப்ரவரி 2025 (15:18 IST)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக பட்டியலிடப்பட்ட இந்தியர்களை திரும்ப அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது அமெரிக்கா.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்வான நிலையில் சட்டவிரோதா குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலம்பியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஊடுறுவிய ஆயிரக்கணக்கானோரை கொலம்பியாவுக்கே திரும்ப அனுப்பியது அமெரிக்கா.

 

அதை தொடந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்தியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதன்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கொண்டு வந்து இறக்கியுள்ளது அமெரிக்கா.

 

அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அவர்களை கைப்பையை தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை என கூறப்படும் நிலையில், இந்தியாவில் தங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் வெறும் கையாக வந்து இறங்கியிருக்கின்றனர். அடுத்தடுத்து மேலும் பலரையும் அமெரிக்கா இவ்வாறாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளது.

 

தற்போது இவர்களது விவரங்கள் பெறப்பட்டு அவர்களது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. நாடு கடத்தல் நடவடிக்கையால் அமெரிக்க ராணுவ விமானம் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை. ஆனால் கடைசி முறையும் அல்ல. இனி அடுத்தடுத்து பல இந்தியர்களை இவ்வாறு அமெரிக்க அனுப்பி வைக்க உள்ள நிலையில் அவர்களது எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்