மருத்துவ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள மலையாள திரைப்படமான "வைரஸ்" படத்தை இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஞ்சாக் பாபா, ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இண்டிரைத் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கால்லிங், ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வைரஸ் திரைப்படம் 2018 ம் ஆண்டில் கேரளாவை உலுக்கியெடுத்த நிபா வைரஸ் (Nipah) தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முஹ்சின் பரிரி, ஷார்பூ மற்றும் சுஹாஸ் ஆகியோர் இப்படத்தின் கதையை வடிவமைத்துள்ளனர் . படத்தை ஆஷிக் அபுவின் மனைவியும் நடிகையுமான ரீமா கல்லிங் தயாரிக்கிறார்.