160 ஏக்கர் நிலத்திற்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.
மேலும் குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.