மேற்குவங்க மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு.! நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு.!!

Senthil Velan

திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:45 IST)
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  
 
மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் தனியாக வழக்கு விசாரிக்கப்படுகிறது. 
 
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
எனவே, மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   


ALSO READ: எத்தனை பெரியார் வந்தாலும் மூடநம்பிக்கையில் நம்மை மூழ்கடிச்சிடுவாங்க.! மகாவிஷ்ணுவை வெளுத்து வாங்கிய தயாநிதிமாறன்.!!


நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்