கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. கூர்கா, தர்ம பிரபு, ஜாம்பி என அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்களில் யோகி பாபு லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரேஷ்மா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது யோகி பாபுவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நடிகை ரேஷ்மா விளக்கமளித்துள்ளதாவது, நிறைய பேர் எனக்கும் யோகி பாபுற்கும் காதல் என்று கிசு கிசுக்கப்பட்ட செய்திகளை அனுப்பி வைத்தனர். இது சோஷியல் மீடியாவில் வைரலானதால் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதனால் யோகிபாபுவுடன் அடுத்து நடிக்கலாம் என தோன்றியது, அதற்குரிய சான்ஸும் ஒன்று வந்துள்ளது. எனவே கூடிய விரைவில் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார்.