22 வயதில் இப்படியொரு படமா என்று துருவங்கள் பதினாறு படத்தையும், அதை இயக்கிய கார்த்திக் நரேனையும் தமிழகம் வாய் வலிக்க பாராட்டி வருகிறது. அவரும், எந்த கமர்ஷியல் காம்ப்ரமைஸும் இல்லாமல் தனது அடுத்தப் படம் நரகாசுரனை இயக்கப் போவதாகக் கூறி அரவிந்த்சாமியையும் ஒப்பந்தம் செய்துள்ளார்.
கார்த்திக் நரேனை பாராட்டியவர்களில் கௌதமும் முக்கியமானவர். அவர்தான் நரகாசுரனை தயாரிக்கப் போகிறார் என காற்றுவாக்கில் ஒரு தகவல். கௌதம் நல்லவர் வல்லவர் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். அதிலெல்லாம் பாதகமில்லை. ஆனால், பைனான்ஸ் விஷயத்தில்...?