மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை சாந்தணுவை வைத்து இயக்கினார். அந்த படம் பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் விக்ரம் சுகுமாரன் அடுத்த படம் இயக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.