பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன 'யாத்திசை' படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன் மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த 'லக்கிமேன்' படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார். ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
'யாத்திசை' தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் 'லக்கிமேன்' இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது. திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.