விஜய் மக்கள் இயக்கத்தில் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.. அதிருப்தியில் ரசிகர்கள்..!

வியாழன், 22 ஜூன் 2023 (09:33 IST)
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பேரணி நடத்த காவல்துறையில் அனுமதி கேட்ட நிலையில் காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் விஜய் இன்று 49-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை 50 இருசக்கர வாகனங்களுடன் கூடிய பேரணி நடத்த காவல்துறையிடம் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அனுமதி கேட்டனர். 
 
ஆனால் பேரணி நடத்த இறுதி நேரத்தில் அனுமதி கடிதம் அளித்து கேட்டதாகவும் அதன் அடிப்படையில் வாகன பேரணிக்கு அனுமதி தர முடியாது என காவல்துறை மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதனால் விஜய் மக்கள் இயக்குனர் இயக்கத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்