ஓநாய், கோடாரியுடன் விஜய்.. நள்ளிரவில் வெளியான ‘லியோ’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

வியாழன், 22 ஜூன் 2023 (07:37 IST)
தளபதி விஜய் இன்றைய தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் அதிகாலை முதல் வைரல் ஆகி வருகிறது. 
 
இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் கையில் கோடாரியுடன் விஜய் ஆவேசமாக இருக்கும் காட்சியும் பின்னணியில் ஓநாய் ஒன்று இருப்பது போலவும் உள்ளது. 
 
காஷ்மீரின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டது போல் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போஸ்டரை பார்த்தவுடன் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலாக இருப்பதாக பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிறந்த நாள் பரிசாக இன்று மாலை இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி என்ற பாடலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அனிருத் காம்போஸ் செய்த இந்த பாடலை விஜய் அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்