178 நிமிடங்கள் என்பது கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் படத்தின் நீளம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக விஜய் ரசிகர்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள பல படங்கள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மாஸ்டர் படமும் அந்த லிஸ்ட்டில் இணையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் விஜய் , விஜய்சேதுபதி, மாளவிகா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகிய பிரபலங்கள் இந்த படத்தில் இருப்பதால் மூன்று மணி நேர ரன்னிங் டைம் என்பது ஒரு பெரிய குறையாக இருக்காது என்றும் அவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்