இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்து உள்ளார். விஜய் சந்திப்பின்போது அவர் வைத்த கோரிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என்றும் அனைத்து திரையரங்குகளையும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக முதல்வர் பழனிசாமி கூறினார்