அதற்குள் தொடங்கியதா விஜய் 68 படத்தின் வியாபாரம்?

திங்கள், 17 ஜூலை 2023 (09:41 IST)
லியோ படத்துக்குப் பிறகு விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் பணியாற்றும் பிறக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  இந்நிலையில் இப்போது படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கீதை திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யும் யுவன் ஷங்கர் ராஜாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்