படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு அசரீரி போல ஒரு குரல் கேட்டு, அவரை தூண்டும் விதமாக அமைக்கபட்டுள்ளது. அந்த குரலால்தான் பயந்தவரான அவர் மாவீரனாக மாற்றுகிறது. அப்படிப்பட்ட அந்த குரலுக்கு டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் குரலும் ஒரு சிறு காரணமாக அமைந்துள்ளது.