மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நிலையில் ஒரு சில தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரே ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஒரு பொண்ணு ஒரு பையன் என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அதன் பிறகு ராமன் தேடிய சீதை என்ற படத்தில், விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் த்ரிஷாவின் பாட்டியாகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.