விஜய்- அஜித் புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு

வியாழன், 6 ஜனவரி 2022 (22:46 IST)
2021 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் மா நாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வி ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளார்  சுரேஷ் தயாரித்திருந்தார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அடுத்த படத்தின் வேலைகளை இறங்கியுள்ளார். அடுத்த படமாக இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் இப்போது இதை கிச்சா சுதீப் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘எனது அடுத்த படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார். எனக்கான நல்ல கதைகள் எனது மாநிலத்திலும் அண்டை மாநிலங்களில் இருந்தும்தான் வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.

 இந்நிலையில் இயக்கு நர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருடன் இணைது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. இப்புகைப்பம் மங்காத்தா பட உருவாக்கத்தின் போது உருவாக்கப்பட்டது.

This lifetime pic was taken exactly 11 years ago today!!! #mankatha #BestOfFriends #thalathalabathy pic.twitter.com/6G0LVJqhR2

— venkat prabhu (@vp_offl) January 6, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்