இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் ஏழாவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் மற்றும் எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சபரிஷ் நந்தா இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஐரா மற்றும் நவரசா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தில் மெஹ்ரின் பிரசண்டா கதாநாயகியாக நடிக்க, அனிகா சுரேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மெடிக்கல் பின்னணியில் நடக்கும் குற்றத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாவதாக தெரிகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.