இதில், ராணுவத்தினர் தாக்குதலே ஓங்கியிருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை ஈராக் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் அப்துல்லா லஹாப், 'ருட்பா பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூத்த ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர் 'என்று தெரிவித்துள்ளார்.