வாடிவாசல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை நீண்ட நாட்கள் ஷூட் செய்துகொண்டே இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது.
விடுதலை 2 படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் வாடிவாசல் பட வேலைகளை அடுத்து தொடங்கவுள்ளார்.இந்நிலையில் மாட்டுப்பொங்கல் பண்டிகை அன்று வாடிவாசல் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 2025 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகள் நடந்து படம் 2027 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.