மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், விவசாயிகள் சுமார் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபல பாட பாடகி ரிஹானா, டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்ப்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்… டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். ஆனல், இவருக்கு எதிரான நெட்டிசன்கள் அவரது மதம் என்ன என்பது குறித்து, கூகுளில் தேடி வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தலைவி பட நாயகி, கங்கனா, அவரை முட்டாள் எனக்கூறியதுடன் , அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டைத்துண்டாட முயல்கிற தீவிராவதிகள் எனக் கூறினார்.
இவரது கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியதுடன் பெரும்சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், தற்போது, நடிகை கங்கனாவின் டுவிட்டர் பதிவு அந்நிறுவனத்தில் விதிமுறைகளை மீறியதாக அவரது பதிவுகளை நீக்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் கங்கனா.