"லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
புதன், 18 அக்டோபர் 2023 (10:42 IST)
லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று தமிழக அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சற்று முன் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில் "லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 9 மணி காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் லியோ திரைப்படம் 9 மணியில் இருந்து இரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் நடத்தவே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.