கடந்த 1967 ஆம் ஆண்டு, தெலுங்கு சினிமாவில் சுடிகுண்டலு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நாகார்ஜூனா. இப்படத்தில் அவர் தந்தை அக்னேனி நாகேஷ்வர ராவ் நடித்திருந்தார். இப்படத்தை அடிருதி சுப்ப்பாராவ் இயக்கினார்.
இப்படங்களை அடுத்து,கீதாஞ்சலி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துப் பிரபலமானார். தமிழில் ரட்சகன, தோழா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு நிகராக கொண்டாடப்படும் இவர், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் விரைவில் தி ஹோஸ்ட் என்ற படம் ரிலீஸாகவுள்ளது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாகார்ஜூனாவுக்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, தனது டுவிட்டர் பக்கத்தில், உங்கள் வாழ்வில் மகிழ்சியும் மிகுதியானவைகள் கிடைக்கட்டு என பிறந்த நாள் வாழ்த்துஎனப் பதிவிட்டுள்ளார்
அதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உங்களுக்கு நல்ல உடல் நலமும், வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.