‘விஜய் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

சனி, 16 டிசம்பர் 2017 (11:36 IST)
விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி, ‘விஜய் 62’ படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக நயன்தாரா அல்லது ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்கிறார்கள். கிரீஷ்  கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
 
‘கத்தி’ போலவே இந்தப் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய் என்று கூறப்பட்டது. அதுவும், மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், டைரக்‌ஷன் டீம் இதை மறுத்துள்ளது. இன்னும் ஃபைனல் கதை  முடியாததால், எதைப்பற்றியும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்