இயக்குனர் செல்வராகவன் வீட்டில் முதல்வர் ஸ்டாலின்: வைரல் புகைப்படம்!

செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (08:07 IST)
இயக்குனர் செல்வராகவன் வீட்டில் முதல்வர் ஸ்டாலின்: வைரல் புகைப்படம்!
பிரபல இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு தமிழக முதல்வர் திடீரென சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த புகைப்படத்தில் செல்வராகவனின் தந்தை தாய் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். முதல்வர் முக ஸ்டாலின் தனது இல்லத்திற்கு வந்தது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் பகிர்ந்துகொள்ளார்.
 
இந்த பதிவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்