இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் அளிக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம். நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம். திமுக மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகளை திரித்து வெளியிடக்கூடிய செயல் தொடர்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் “மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலகம் விளைவிக்க நச்சு சக்திகள் முயற்சிக்கின்றன. திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள் பேசியதை தவறான பொருள்படும்படி வெட்டி, ஒட்டி வெளியிடுகிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படும் நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. மக்களுக்கான பணியை மட்டும் கவனிப்போம்” என தெரிவித்துள்ளார்.