13 வேடங்களில் நடிக்கும் சூர்யா ! ரசிகர்கள் மகிழ்ச்சி

புதன், 28 டிசம்பர் 2022 (22:50 IST)
நடிகர் சூர்யா  நடிப்பில் உருவாகி வரும் சூர்யா42 படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்ன்ணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தில் நடிகை திஷா பத்தானி, ஆந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,  நடிகர் சூர்யா 13 வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இப்படம் 3டியில் தயாராகிறதாகவும், வரும் மார்ச் மாதம் இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்