’சூர்யா 42’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ பட நடிகர்!

திங்கள், 19 டிசம்பர் 2022 (17:03 IST)
சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்த நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் முக்கிய கேரக்டர்களில் ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த படத்தில் டாக்டர், பிகில் ஆகிய படங்களில் நடித்த கராத்தே கார்த்திக் என்பவர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைபெறும் சென்னை படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்