இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை இப்போது போனி கபூர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் சூர்யாவின் 44 ஆவது படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் எனக் கூறியுள்ளார். சூர்யாவின் 42 ஆவது படமாக கங்குவா படமும், 43 ஆவது படமாக சுதா கொங்கரா இயக்கும் படமும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.