ஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபல இயக்குனர்: ஆதாரத்துடன் அம்பலம்

புதன், 20 பிப்ரவரி 2019 (09:38 IST)
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் பழையபடி, ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

 
உலகத்திலேயே நம்பர்-1 மோசமானவர் என கூறினார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படியே கூறிக்கொண்டிருப்பதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள் என கூறினர்.
 
இதையடுத்து ஒரு படு மோசமான புகைப்படத்தை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது உண்மையா அல்லது பொய்யா என்பது அந்த ஆண்டவனுக்கும் ஸ்ரீரெட்டிக்கும் தான் வெளிச்சம். அந்த புகைப்படம் கொச்சையாக இருப்பதால் நாங்கள் அதனை இந்த பதிவில் இணைக்கவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்