ஏ ஐ மூலமாக எஸ் பி பி குரலில் பாட்டு… இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய எஸ் பி சரண்!

vinoth

திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:27 IST)
கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கில் ‘கீடா கோலா’ எனும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் ஒரு பாடலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் குரலை ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி இருந்ததாக அந்த படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் தந்தையின் குரலை பயன்படுத்த எந்த அனுமதியும் தங்களிடம் இருந்து பெறவில்லை என பாடகர் எஸ் பி சரண் இப்போது இசையமைப்பாளர் விவேக் சாகருக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் “எங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் குரலைப் பயன்படுத்தியது மகிழ்ச்சிதான். ஆனால் அது தொடர்பாக அவர்கள் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. வியாபாரத்துக்காக ஒரு ஜாம்பவானின் குரல் இப்படி பயன்படுத்தப்படுவது வருத்தத்துக்குரியது.  இதனால் குரலை தங்கள் சொத்தாகக் கருதும் பல பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்