ஜெயிலர் பிளாஷ்பேக் காட்சி…. ரஜினிக்குப் பதில் வேறொரு நடிகரா?

திங்கள், 27 ஜூன் 2022 (15:32 IST)
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவி வைரலாகி வருகின்றது. ஆனால் இந்த தகவல் உண்மையாக வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்