இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் உள்ளிட்ட பல ஹிட் படங்களின் கலை இயக்குனர் DRK கிரண், ஜெயிலர் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, “என் கனவு” என்று டிவீட் செய்துள்ளார். இதன் மூலம் இவர்தான் ஜெயிலர் படத்தின் கலை இயக்குனர் என்பது உறுதியாகியுள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.