கேர்ள் ஃபிரண்ட் இல்லாதவங்க போனையே லவ் பண்ணலாம்: ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ டிரைலர்..!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (18:21 IST)
கேர்ள் ஃபிரண்ட் இல்லாதவங்க போனையே லவ் பண்ணலாம்: ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ டிரைலர்..!
தமிழ் திரை உலகின் காமெடி ஹீரோக்களில் ஒருவரான சிவா நடிப்பில் உருவான ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் க்கு தயாராக உள்ளது. 
 
இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
சிவா மற்றும் மேககாஆகாஷின் காமெடி காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், மாகாபா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
விக்னேஷ் ஷா இயக்கத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்