நாளை மகா சிவராத்திரி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விரதம் இருந்தால் ஏகப்பட்ட பயன் உண்டு என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி சிவாலயம் சென்று விரதம் இருக்க வேண்டும். மேலும் அந்த விரதத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.
பூஜைக்கு தேவையான பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டு விரதம் முடிந்தவுடன் பொழுது சாயும் நேரத்தில் குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கன்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகள் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.
சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் என்றும் வீட்டில் தெய்வ கடாட்சம் பெருகும் என்றும் லட்சுமி அனுகிரகம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.