ரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு..!

புதன், 14 நவம்பர் 2018 (18:08 IST)
நடிகர் சிம்பு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார். 
 
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சிம்பு நடிப்பில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் உருவாகி வருகிறது.
 
இந்நிலையில் அவர் பென்ட்லே காண்டினென்டல் ஜிடி எனும் சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.3.30 கோடியிருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த காரை ஹைதரபாத்தில் அவர் டெஸ்ட் டிரைவ் செய்த புகைபடங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 
 
புதிய காரில் சிம்பு மாஸாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்