ஹன்சிகாவின் நான்கு நாட்களுக்காக சிம்பு வெயிட்டிங்

செவ்வாய், 21 ஜூலை 2020 (20:15 IST)
ஹன்சிகா நடித்த 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்தப் படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்ததே
 
ஹன்சிகா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒரு காலத்தில் காதலித்தவர்கள் என்றாலும் ஹன்சிகாவிடம் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டார். ஆனால் சிம்பு இந்த படத்தில் கொடுத்த ஒத்துழைப்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் சிம்புவின் கேரக்டரை விரிவுபடுத்தினார். தற்போது கிட்டத்தட்ட சிம்பு இந்த படத்தின் ஹீரோவாகவே மாறி விட்டார் என்பதும் இந்த படத்திற்கு அதிக கால்சீட் சிம்பு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு மட்டும் இருப்பதாகவும் அதில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஹன்சிகா மும்பையில் இருப்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் அவர் சென்னை வந்து சிம்புவுடன் இரண்டு நாட்களும் தனியாக இரண்டு நாட்களும் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு மட்டும் முடிந்துவிட்டால் மகா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்