இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் படத்தை எடிட் செய்த வெற்றிமாறன், இன்னும் சில காட்சிகளை படமாக்கி இணைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இதனால் நாளை முதல் ஒரு வாரத்துக்கு சில காட்சிகளை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதி, பாண்டிராஜ் பட ஷூட்டிங்குக்கு இடைவெளி விட்டுவிட்டு வருகிறாராம்.