நான் உண்மையில் அதிர்ஷடசாலி இப்படி ஒரு காதலன் கிடைக்க... ஸ்ருதி ஹாசன்!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (11:59 IST)
காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!
 
வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 
 
இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு சினிமாவின் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். 
 
சில காதல் தோல்விக்கு பின்னர் ஸ்ருதி ஹாசன் ராப் பாடகர் சந்தானு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
 
இந்நிலையில் காதலனுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்றை வெளியிட்டு நீ தான் சிறந்தவன், நீ எப்போதும் என் நினைவில் இருப்பாய். உன்னை போல் ஒருவன் கிடைத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்