சமந்தாவின் ‘சாகுந்தலம்’: மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:16 IST)
சமந்தாவின் ‘சாகுந்தலம்’: மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சமந்தா நடித்த சாகுந்தலம் என்ற திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமந்தா நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட சாகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் அதன் பின் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என மீண்டும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது இந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
சமந்தா, மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்