நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பிரபலங்கள் தங்கள் செல்வத்தின் மூலம் கிடைக்கும் வசதிகளை மக்களின் முகத்தில் வீசவேண்டாம் என்று கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மாலத்தீவு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு சென்று தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமுஇகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.