தற்போது தமிழ், தெலுங்கில் ‘கரு’ என்ற பெயரில் தயாராகி தற்போது ‘தியா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகன் நாகசவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து சாய்பல்லவி ஏற்கனவே பேசியிருந்தாலும், இந்த பிரச்சனை தீராமல் இருப்பதால் மீண்டும் இது குறித்து பேசியுள்ளார். சாய் பல்லவி கூறியதாவது, நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரிடம் நான் பேசாமல் இருந்ததால் ஒருவேளை என்னை அவர் தவறாக புரிந்து இருக்கலாம்.