சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தூதுவராக நியமிக்க பட்ட ராஷ்மிகா!

vinoth

வியாழன், 17 அக்டோபர் 2024 (14:23 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில்,  கடந்த ஆண்டு ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட அவரது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில் அதை எதிர்த்து தைரியமாக பேசினார்.

அப்போது “தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்” என வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

அதன்பின்னர் அந்த குற்றத்தில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் துணிச்சலாக செயலபட்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போது சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக் குழுவின் பிராண்ட் அம்பாசடார் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்