தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இயங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அவரிடம் இருந்து நல்ல பாடல்கள் அதிகமாக வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் அவரால் தன்னுடைய பழைய பாடல்களுக்கு ஈடாக பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் அவர் இசையமைத்த கோட் படத்தின் பாடல்களும் இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் யுவன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய குடும்ப விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது பற்றியும் அதற்கு தனது தந்தையிடம் இருந்து வந்த எதிர்வினையையும் பற்றி பேசியுள்ளார்.