இந்நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் அவர் தேள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபுதேவா படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசினார். பின்னர் இந்த படத்தில் எனக்கு நடனக் காட்சிகளே இல்லை என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.