மீண்டும் இணையும் பிரபுதேவா விஜய் கூட்டணி… குஷியான ரசிகர்கள்!

திங்கள், 15 நவம்பர் 2021 (11:10 IST)
நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நாளுக்கு நாள் ஏதாவது அப்டேட் ஒன்று வெளியாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் இந்த படத்தில் இரு மொழி ரசிகர்களையும் திருப்திப் படுத்தும் விதமாக உருவாக்க உள்ளார் இயக்குனர் வம்சி. இந்நிலையில் படத்தில் இரு மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை பணியாற்ற வைக்கும் முடிவில் உள்ளனர்.

இதனால் இந்த படத்தில் பாடல் ஒன்றை நடன இயக்குனர் பிரபுதேவா நடனமைக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து வில்லு மற்றும் போக்கிரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்