நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவர் இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி, தற்போது இந்தத் தகவல் உண்மையும் ஆகியிருக்கிறது.
இப்படத்தில் ராஜ்கிரணுக்கு மகனாக நடிகர் பிரசன்னா நடிக்கிறார். இவர் தவிர மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.