பொன்னியின் செல்வன் 2 படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலின்!

செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:46 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்போது வரை படம் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 ஆம் தேதி என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு சுவாரஸ்ய தகவலாக இரண்டாம் பாகத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு நேர்காணலில் “விரைவில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்