இந்நிலையில், ‘களவாணி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் சற்குணம். வெற்றிக்காகக் காத்திருக்கும் விமல் கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்ல, ‘கதை கேட்டுவிட்டுத்தான் முடிவு சொல்வேன்’ என்றிருக்கிறார் ஓவியா. காரணம், முன்பு போல கண்ட கண்ட படங்களில் நடிக்காமல், தனக்கிருக்கும் ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். அதன்படி, ‘களவாணி 2’ கதையைக் கேட்ட ஓவியாவுக்கு, அவரின் கேரக்டர் பிடிக்கவில்லையாம். எனவே, அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.