ஓவியாவுக்கு ஒரு கோடி கொடுத்தாரா பிரபல தொழிலதிபர்? பரபரப்பு தகவல்

புதன், 27 செப்டம்பர் 2017 (23:10 IST)
பிக்பாஸ் நாயகி ஓவியா பொதுமக்களின் செல்லப்பிள்ளையாகியுள்ள நிலையில் அவர் என்ன செய்தாலும் அதை ரசிக்க தயாராக உள்ளனர்.



 
 
ஓவியாவின் இந்த பாப்புலாரிட்டியை பயன்படுத்த பல தொழிலதிபர்கள் முயற்சி செய்தாலும், அதில் தி.நகர் முன்னணி தொழிலதிபர் ஒருவருக்கே வெற்றி கிட்டியது
 
சமீபத்தில் தனது புதிய கிளை திறப்பு விழாவுக்கு ஓவியாவை வரவழைத்த இந்த தொழிலதிபர், தனது நிறுவனத்தின் அடுத்த விளம்பர படத்தில் ஓவியாவுடன் நடனமும் ஆடியுள்ளார். கடைதிறப்பு மற்றும் விளம்பர படத்திற்காக அவர் ஓவியாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு ரூ.50 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஓவியாவின் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளது. ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய் இல்லை என்றும் நியாயமான சம்பளத்தை மட்டுமே ஓவியா பெற்றுள்ளதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்